ஜோதிடர் கல்வி நிலையம், நூல் நிலையம் மற்றும் படிப்பகம் அமைத்து சங்க உறுப்பினர்களின் கல்வி, அறிவு, விஞ்ஞானம், கலை மற்றும் கலைச்சாரத்தை மேம்படுத்துதல்.
சங்க உறுப்பினர்களுக்காக பேட்டிமின்டன், கேரம், செஸ் மற்றும் உள்ளரங்க விளையாட்டுகள் நடத்துதல் மற்றும் கால்பந்து, வாலிபால் போன்ற விளையாட்டுகளை வருடம் தோறும் நடத்தி சங்க உறுப்பினர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துதல்.
சமூக சேவை, மருத்துவமமனை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சங்க நிதியிலிருந்து நன்கொடை வழங்குதல்.
சங்க உறுப்பினர்களிடையே நட்பையும் ஒற்றுமையையும் பேணிக்காத்தல்.
ஜோதிடர்கள் அல்லாதவரும் இச்சங்கத்தில் உறுப்பினராக சேர தகுதி பெற்றவர்கள் ஆவர்.
உறுப்பினராக சேர விரும்புநோர் தனது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உறுப்பினர் சந்தா செலவுகளுடன் அலுவலக நியமன நாளில் நேரடியாக தர வேண்டும்.
உறுப்பினராக ஆக்குவதும் அல்லது மனுவை நிராகரிப்பதும் நிர்வாக குழுவின் முடிவு இறுதியானதாகும்.
ஒவ்வொரு உறுப்பினர்களும் வருடாந்திர கட்டணம் மற்றும் சந்தா செலவுகளுடன் அலுவலக நியமன நாளில் செலுத்த வேண்டும்.